
எதன் காரணமாக நீ காத்திருக்கிறாய்
அழிவுக்குண்டான கணம்
உதிரும் உலகம்
ஒரு மலருக்குள்ளே
என் பெருங்காடு குடியிருக்கிறது..
பின்னியிறுக்கும் நரம்பெங்கிலும்
அந்தி மந்தாரை வாசனைகள்
நிறைந்த நீளிரவில் இரு துளி
நீர் தழுவும் காலக் கனதியென
பெய்கிறது வானம்
ஆம்பலில் சிக்கும் கொடிப் பாசியிடுக்குகளில்
நாணங்கரைய பூத்திருக்கும்
நிசாகாந்திக் காடுகளின் துளிப் பனியென
என் கண்ணீர் உனக்கு இப்போது
தாகிக்க துவங்கியிருக்கிறது
கயூரி புவிராசா