பழனியப்பன் சிவராமலிங்கம்

இயற்கைக்கும் கோவம்..
இன்றைக்கு இங்கே..!
மாசுபடுத்தும் மனிதனை திருத்த..
மார்க்கம் ஒன்றை கண்டது..!
சுயநல போக்கில்..சர்வாதிகார திமிரில்..
சுற்றுசுழலை பாழாக்கும் வல்லாதிக்க சக்திகளை..!
வென்றெடுக்க..வெற்றி காண..
தன்னை தானே புதுப்பித்து கொள்ள..!
உலகம் சுற்றும்..மனிதனை..
வீட்டிற்குள் அடைத்து போட்டது..!
வாகனத்தையும் தொழிற்கூடத்தையும்..
நிறுத்தி..கார்பன் அளவை கட்டுப்படுத்தியது..!
திருந்தா மனிதனை..உயிர் பயம் காட்டி..
கொரோனாவால் கொன்று போட்டது..!
பிராண வாயுவை தரும் மரத்தை அழிக்க..
பிராண வாயுவின்றி பிராணணும் போனது.
இயற்கையை பாதுகாக்காவிட்டால்..இனி..
இறைவனிடம் கூட முறையிட முடியாது..!