
நீ இன்றிய என்
ஏகாந்த வெளிகளை
உன் நினைவலைகள்
அதிகமாய் என்னில்
உன்னை நிரப்பி
கொண்டிருக்கின்றன…
என் தனிமையை
உழுது கொண்டிருக்கும்
இந்த
தவக்காலப் பொழுதில்
பூரணமாய் – என்
மனம் உன்னைப் பூஜித்து
உன் வருகை
பார்த்திருக்கின்றது..
நீண்ட நேர தியானத்தில்
நின் நாமமதை ஜெபம்
செய்கிறேன்..
மூடிய விழிகளுக்குள்ளும்
நிறைந்திருக்கிறாய் நீ
எங்கும் நிறைந்தது
காற்று மட்டுமல்ல
காதலும் தான்..
அதை ஆமோதித்தே
வானத்திலிருந்து
அசரீதி கூவுகிறது
ததாஸ்து ததாஸ்து என..
சங்கரி சிவகணேசன்