
“லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் 33 வயதான Sarah Everard. இவர் கடந்த 3ம் திகதி தெற்கு லண்டனில் கிளாபம் காமன் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தநிலையில் கடந்த புதன் கிழமை Sarah Everard சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த யுவதி பொலிஸ் அதிகாரி ஒருரினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Sarah Everard இன் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிளாபம் பகுதியில் ஒன்று கூடிய பொது மக்கள் யுவதியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் பொலிசார் மக்களுக்கு பலவித எச்சரிக்கைகளை விடுத்து மக்களை அப்புறப்படுத்தியிருந்தனர். இவ்விடயத்தில் பொலிசாரின் நடவடிக்கைகள் கடுமையானவை என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.