
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்
முதல் தடவையாக இலங்கை ரூபாயின் பெறுமதி பவுண்டிற்கு நிராக இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 272.31 ரூபாவாகவும், விற்பனை விலை 282.24 ரூபாவாகவும் பதிவகியுள்ளது. கடந்த நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதியிலும் பாரிய வீழ்ச்சிய ஏற்பட்டு வருகின்றது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 195.30 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக யூரோ ஒன்றின் விற்பனை விலை 241.99 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், கொள்வனவு விலை 233.12 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.