
கொவிட் 19 காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை காரணங்காட்டி பாதிப்படைவதாக கூறி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் முன் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
மேலும், நான்கு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, பாரிஸில் வசிக்கும் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சிங்களம் மற்றும் தமிழில் அணிவகுத்து போராட்டத்தை நடத்தினர்.