எழுதியவர் – பாவலன்

முயன்று பார்
முடியாதது எதுவும்
இல்லை
முதலில் இலக்கை
தெரிவு செய்
குறி வை
அசந்திடாதே
கவனமாக முன்னேறு
இலக்கு
உனக்கு
அண்மையில்
சோர்ந்து விடாதே
கால் ஆற விட்டால்
களைத்து விடுவாய்
வெற்றியின் பின்
போதிய ஓய்வு
எடுத்து கொள்
அது வரை
ஓடிக்கொண்டே இரு
தூரம் அதிகமில்லை
ஓடு மீன் ஓடி
உறு மீன் வரும் வரை
காத்திருக்குமாம் கொக்கு
நீயும் உன் இலக்கு
எதுவோ அதுவரை
ஓடு முடிந்தால்
அதையும் தாண்டி
ஓடு…