கொவிட் பரவல் காரணமாக பதிலளிக்க முடியாத கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பை வழங்கவென நாடாளுமன்றத்தை இரு நாட்கள் விஷேடமாகக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி செப்டெம்பர் 6ஆம் திகதியும் செப்டெம்பர் 27ஆம் திகதியுமாக இரு விஷேட நாட்களில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இது குறித்த முன்மொழிவு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் முன்வைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.