மேஷம்

எதிர்பார்த்த தனவரவுகள் இருக்காது. வீட்டில் நிம்மதி இன்மை காரணமாக குழப்பங்கள் ஏற்படலாம். தோல்வி பயத்தால் முன்னேற்றம் தடைப்படும். வாக்குவாதத்தால் வீண் பகை ஏற்படும்.

ரிஷபம்

பெரியவர்கள் அன்பும், பாசமும் தெம்பைத் தரும். எதிர்பார்த்த தனலாபங்கள் ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். சாத்திரங்களில் தேர்ந்து ஆராய்ச்சி மனப்பான்மை மேலோங்கும்.

மிதுனம்

வீண் கோபத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது. அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.

கன்னி

பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.

மகரம்

பயணங்களில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவி இருக்காது. எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைப்பது அரிது.

கடகம்

இன்பச் சுற்றுலா, நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். நல்ல, ருசியான உணவு வகைகள் கிடைக்கும்.

சிம்மம்

தனலாபம், நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். பல முகாந்திரங்களிலும் பணவரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்

இன்று, சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.

மீனம்
எந்த செயல்பாட்டிலும் வெற்றி கிட்டும். அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்கள் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும்.

தனுசு
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். புதிய பரிசுப் பொருட்கள் கிடைத்து, வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்கள் நட்பால் சந்தோஷம் ஏற்படும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.

கும்பம்
எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். சந்தோஷமான வாழ்க்கை அமையும். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முன்னேற முயலுங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal