
மேஷம்
சிறு சிறு பிரச்சனைகள் உங்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு இல்லாமல் எரிச்சல் உண்டாகும். எடுத்த காரியங்கள் வெற்றி பெற இடைவிடாத உழைப்புத் தேவை.
ரிஷபம்
சம்பாத்தியம் அதிகரிப்பதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம், பணியில் இருப்பவர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும்.
மிதுனம்
தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். கோபத்தால் காரியங்கள் கெடும்.
கன்னி
பல பயணங்கள் ஏற்படலாம். அதில் ஒன்று புண்ணியப் பயணமாகி சுகானுபவங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மகரம்
உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவும். எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும். நிதானமாக செயல்படுங்கள்.
கடகம்
பெரிய மனிதர்களின் நட்பால் பேருதவிகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கவலை வேண்டாம். சீக்கிரம் கால்கட்டு விழும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
வாக்கு வன்மையால் சாதுர்யத்தால், எடுத்த காரியங்கள் அனைத்திலும். வெற்றி அடைவது உறுதி. அனைவரையும் கவர்வீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
துலாம்
சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளின் ஆண்களை மதித்து நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனதில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.
மீனம்
நல்ல உடை உடுத்தி, நாகரீகமாக, மிடுக்காக மற்றவர்களை கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும். தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும்.
தனுசு
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
மனையாளின் ஒத்துழைப்பு மட்டற்ற மகிழ்ச்சி தரும். தனவரவு கூடும். புதிய முகநூல் நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.
கும்பம்
எடுக்கும் காரியங்கள் அனைத்தும் ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். இயலாமை காரணமாக இல்லத்தில் உள்ளவர்கள் மீது ஏற்படும் எரிச்சலை குறைத்தால், இரத்த அழுத்தம் எகிராது.