எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன்

நான் பயந்தே போனேன்
பழக்கப்பட்ட உடல் .
மறுக்க முடியாமல்
கல்லறையில் உறங்குகிறது
பூமியின் சுவாசம்
ஓ மனிதர்களே
இறந்தக் காற்றை
சுவாசித்துக் கொண்டு
எத்தனைக் காலம்
நீங்கள் உயிரோடிருப்பீர்கள்
சமாதியில் வாழும்வரை
ஆடும்வரை ஆடுங்கள்
என் கழிவுகளை
நானே மறுசுழற்சி செய்கிறேன்
ஒருநாள் உங்களையும் …