அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு பிரேரணையை ஏற்பாடு செய்ய வேண்டாம் என பசில் கூறியுள்ளார்.
மேலும் அநாவசிய செலவுகளை தவிர்க்கும் படியும், பிரமாண்ட வேலைத்திட்டங்களை இப்பொழுது தயார்படுத்த வேண்டாம் என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.