சுகுணா அம்மு

எல்லோரும் அம்மான்னா
அன்பும் அக்கறையும்
நிறைந்தவள் என
மட்டுமே உணர்வோம்..
ஆனால் நாம்
உயர உயர பறக்க
தன்னோட சிறகுகளை
சந்தோஷமாய்
நமக்கு பொருத்தி
அழகு பார்த்த
தேவதையும் கூட ….
ஒரு தாய் குழந்தைக்கு
செய்வது கடமைதானேன்னு
சட்டம் பேசலாம் தான் …
ஆனாலும் நிறைய சாதித்து
உயரத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கு பின்னும்
ஒரு தாயின்
வைராக்கியமான தியாகம்
கண்டிப்பாக இருக்கும் …
தாயிடம் இருந்தும்
தாயாக இருந்தும்
நான் கற்றதும் பெற்றதும்
அன்பு என்ற மந்திரம்
ஒன்றே….உலகை
நமது ஆளுமைக்குள்
கொண்டுவரும்
என்பது மட்டுமே…