
கண்டியில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் அதிபர் அடித்ததில் மாணவி மயக்கமடைந்தார் என்ற சம்பவம் அதிர்ச்சிப்பரவலை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைக்குச் சமுகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே மாணவி அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ளார். இவ்வேளை திடீரென மயங்கிவிழுந்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மாணவி சுயநினைவு இல்லாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.