×

சர்வதேச சந்தியில் எண்ணை விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவு தற்போது எரிபொருள் விலைகளை பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டு தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நித்திக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மொத்த ஒதுக்கீடு ரூபாய் 57 பில்லியன் தீரும் வரை எரிபொருள் மானிய திட்டம் செயல்படுத்தப்படும். பலர் நம்புவது போல் மாத இறுதியில் இது தானாகவே நிறுத்தப்படாது. ஒதுக்கப்பட்ட பண்த்தின் அளவுக்கு ஏற்ப மானியம் தொடர்ந்து நீடிக்கும். இருப்பினும் இந்த மானியம் தொடருமா இல்லையா என்பதை அரசாங்கம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் எண்ணை விலையில் ஏற்பட்டுள்ள சரிவு தற்போதைய எரிபொருள் விலைகளை பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு பரல் டீசலின் விலை 125 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இந்த உலக சந்தை விலை நீண்ட காலத்துக்கு நிலையாக இருந்தால் கூடுதல் அரசாங்க மானியங்களை அதிகம் நம்பாமலாகி தற்போதைய உள்ளூர் விலைகளை பராமரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை விலை டலர் 125 வரை குறைந்துள்ளதால் தற்போதைய விலை வரம்புகளுக்குள் எரிபொருளை வழங்கும் திறன் எங்களுக்கு உள்ளது. ஆனால் அது சராசரி மதிப்பாக இருக்க வேண்டும். அந்த விலை மட்டும் தொடர்ந்து நீடித்தால் மானியம் இல்லாமலும் தற்போதைய விலைக்கு எரிபொருளை வழங்க முடியும். எனினும் குறுகிய கால சந்தை மாற்றங்களின் அடிப்படையில் விலை திருத்தங்களை செய்ய முடியாது. நிலையான கொள்கை ரீதியான முடிவு எடுப்பதற்கு உலக சந்தையில் இணைவிலை சராசரி மதிப்பாக தொடர்ந்து இந்த குறைந்த மட்டத்தில் நிலைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115