Learn javascript in tamil

Sale!

Learn javascript in tamil

$0.00

Categories: ,

Description

எளிய தமிழில் JavaScript – மின்னூல்-

அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி.

தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.

தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

உங்கள் கருத்துகளையும், பிழைத் திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-javascript-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Learn javascript in tamil”

Your email address will not be published. Required fields are marked *

SCSDO's eHEALTH

Let's Heal