Description
சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருப்பவன் மனிதன் மட்டுமே. மனிதனின் சுயநலத்திற்காகவும், கொள்ளை லாபத்திற்காகவும் ScientistEnvironmentalஇயற்கையைச் சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறான். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருப்பினும், சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக இயற்கையை அழித்துவருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க உலகில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். மரங்களையும், காடுகளையும் மண்ணையும், கடலையும், விலங்குகளையும் பாதுகாக்க பல அமைப்புகளும், பல தனி மனிதர்களும் போராடி வருகின்றனர். இயற்கையை பாதுகாக்க விஞ்ஞானிகள், தலைவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண பெண்கள்கூட தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த பூமியில் உள்ள வளங்களையும், தாவரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாத்து கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
Reviews
There are no reviews yet.