Category: SCSDOR 2020

100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

SCSDO நிறுவனத்தால் வவுனியா அரசாங்க அதிபரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களின் கீழ்வரும் கிராமங்களில் கல்விகற்க ஆர்வமுடைய வறுமையில் உழலும் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கல்வி கருத்தரங்கம்

அத்துடன் ஒலுமடு,சுந்தரபுரம்,மருதன்குளம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்ற வளவியலார்களைக் கொண்டு 3 நிலையங்களில் அயலில் உள்ள பாடசாலைகளையும் இணைத்து கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

தெல்லிபலை புற்றுநோய் வைத்தியசாலை

அறிவியல் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தெல்லிபலை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா கால உதவி

அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO)2020ஆம் ஆண்டு தெற்குப் பிரதேசத்திற்கு தரம் 5க்கு உட்பட்ட 20 ஆரம்ப பாடசாலைகள் கோரிய உதவியின் அடிப்படையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வவுனியா பொது ஆதார வைத்தியசாலை

இத்துடன் நிறுவனத்தால் (SCSDO)வவுனியா பொது ஆதார வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க விசேட தேவைக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு கொரோனா காலத்தில் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

SCSDO's eHEALTH

Let's Heal