புத்தாண்டு 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பிரெஞ்சின் பிரபல சோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பிறக்கவிருக்கும்
அதிர்ச்சியான சில கணிப்புகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிரபல பிரெஞ்சு சோதிடரான நோஸ்ட்ராடாமஸ் 467 வருடங்களுக்கு முன் எதிர்காலம் தொடர்பிலான தமது கணிப்புகளை கவிதைகளாகப் பதிவு செய்துள்ளார். இதில் பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன.

3797 ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகளை அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிறக்கவிருக்கும் 2023 புத்தாண்டு தொடர்பில் அவர் பதிவு செய்துள்ள கணிப்புகள் தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அதில், உணவு விலை அதிகரித்து, மக்களுக்கு ஒருவேளை உணவுக்கும் சிரமம் ஏற்படும் எனவும் மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளதாகவும்

உணவு கிடைக்காததால் மனிதன் மனிதனை உண்ணும் நிலை இதுவாக இருக்கலாம் எனவும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். அடுத்ததாக, ஏழு மாதங்கள் நீளும் கடுமையான போர் மூளும் எனவும், அதன் பின்னர் உலகையே உலுக்கும் பல சம்பவங்கள் அரங்கேறும் எனவும், மக்கள் கொத்தாக மடிவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது உக்ரைன் போருக்குப் பின்னர் நடந்தேறும் சம்பவமாக இருக்கலாம் அல்லது போர்க் குற்றங்களாக இருக்கலாம் எனவும் ஒருசாரார் கருதுகின்றனர்.

அதேசமயம் பூமியின் ஒருபக்கம் வறட்சி தாண்டவமாடும்போது இன்னொருபக்கம் பெருவெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவார்கள் எனவும் 2023 இல் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகமாக மூளும் எனவும் நோஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நோஸ்ட்ராடாமஸ் பதிவுகள் வைரலாகிவரும் நிலையில், பல்கேரிய பாபாவங்காவும் உலகில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் எனக்கூறிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal