2022ல்  பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாக பகீர் கிளப்பும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும்    2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போவதாகவும்    பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா வங்கா யார்?

பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா.ஆனால் இவர் 1996லேயே இறந்துவிட்டார். எனினும் பாபா வங்கா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.

இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது. எனினும் அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். அதன்படி 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.

இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. உதாரணாமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை பாபா வங்கா துல்லியமாக கணித்து இருந்தாராம்.

அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணித்து உள்ளாராம்.

 2022 இல் என்னென்ன நடக்கும்

இந்த நிலையில் 2022ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2022ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உலகம் முழுக்க வெப்பநிலை உயர்ந்து கடல் மட்டம் அதிகரிக்கும்.

இது திடீரென அதிக அளவிலான நிலநடுக்கங்களை ஏற்படுத்தி அது சுனாமிக்கு வழிவகுக்கும். 2022ல் அதிக அளவில் சுனாமி ஏற்படும். பல நாடுகளில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும். மக்கள் இதனால் கடுமையாக பாதிப்பார்கள்.

பல ஆயிரம் பேர் இதனால் பலியாக போகிறார்கள் என்றும் பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் மாசுபாடு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் பல பெருநகரங்கள் தண்ணீர் இன்றி கஷ்டப்படும் என்றும் பாபா வங்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாபா வங்கா வெளியிட்டுள்ள முக்கிய கணிப்பு என்றால், 2022ல் பூமிக்கு ஏலியன் வரும் என்பதுதான். அவர் கணிப்பின்படி ‘ஒமுஅமுவா’ (oumuaumu) என்ற சிறிய கோள் மூலம் பூமிக்கு ஏலியன் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி செய்திகளை அடிக்கடி படிப்பவர்களுக்கு இந்த பெயர் ஏற்கனவே பரிட்சயமாக் இருக்கும். 2017ல் வந்த ஒமுஅமுவா கடந்த 2017லேயே இந்த ஒமுஅமுவா (oumuaumu) பூமிக்கு அருகில் வந்தது.

கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான அந்த சாதனம் பூமிக்கு அருகில் வந்தது. இதற்கு ஒமுஅமுவா (oumuaumu) என்று பெயர் வைக்கப்பட்டது. இது பூமி, சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படவில்லை.

இதனால் இது ஏலியன் வாகனமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். குழப்பம் என்னவெனில் இது பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டு சென்றது. அதன்பின் சூரியனை நோக்கி சென்றுவிட்டு, பின் சூரியனை கடந்து வேறு வழியாக சென்றுவிட்டது.

இது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக அனைத்தையும் கடந்து மிக மெதுவாக சென்றது. தற்போது இது எங்கே இருக்கிறது என யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் இது 2022ல் மீண்டும் பூமிக்கு மீண்டும் வரும் என்றும் , அதில் ஏலியன் வரும் என்று பாபா வங்கா கூறி இருப்பதாக தெந்ரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் 2022ல் முழுக்க முழுக்க உலகம் ஏஐ மயம் ஆகும். அதிகளவில் இணையம், கணிப்பொறியால் virtual உலகமாக எல்லாம் எல்லாம் மாறும் என்று பாபா வங்கா கூறியுள்ளார். பேஸ்புக்கின் மெட்டா உலகம் காரணமாக இந்த கணிப்பு உண்மையாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதெல்லாம் போக உலகை அச்சறுத்த போகும் இன்னொரு விஷயம் என்னவெனில், ஸ்வீடன் நாட்டில் பனிப்பாறைகள் உருகி இத்தனை வருடம் உறைந்த நிலையில் காணப்பட்ட ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்பதுதான்.

இதை வெளியே கொண்டு வருவார்கள் என்றும் பாபா வங்கா கூறியுள்ளார். ஏற்கனவே இந்த வருட தொடக்கத்தில் திபெத் நாட்டில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் 15,000 ஆண்டுகள் உறைந்திருந்த 28 புதிய வகை வைரஸ் உட்பட 33 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்,

அதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவெனில் கொரோனாவிற்கு இடையே இந்த வைரஸ்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் பனிப்பாறைகள் உருகி இதனால் பனியில் இத்தனை வருடம் உறைந்த நிலையில் காணப்பட்ட ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என பாபா வங்கா கூறி இருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.         

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal