இந்தியாவில் சுமார் 16 ஆண்டுகள் லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் நடந்த Win Win lottery குலுக்கலில், Kottayam மாவட்டத்தைச் சேர்ந்த N T Girish Kumar என்பவர் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு 75 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த திங்கட் கிழமை குறித்த லொட்டரி குலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், W 338132 எண் கொண்ட லொட்டரி டிக்கெட் பரிசை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன் உரிமையாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. அதன் பின், கடந்த செவ்வாய் கிழமை, Kuravilangad ஊராட்சி பேருந்து நிலையம், அருகே உள்ள St Mary’s Lottery Agency-க்கு சென்ற N T Girish Kumar தன்னுடைய பரிசை உறுதி செய்தார்.

இதையடுத்து, அவர் அந்த டிக்கெட்டை கனரா வங்கி கிளையில் சமர்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கி வருவதாகவும், ஆனால் முதல் பரிசு விழுவது இது தான் முதல் முறை, இந்த பரிசு தொகையை வைத்து, ஒரு நிலத்தை வாங்கி அதில் வீட்டை கட்டி சொந்தமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.       

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal