
தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் புது வருடத்துக்கு பின்னர் கடுமையான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பாடசாலைகள் நடத்திச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.