சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிதிஷ் ரணா 80 ஓட்டங்களையும் ராகுல் திரிபத்தி 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும் ஜோனி பேயர்ஸ்டொவ் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்ணா 2 விக்கெட்டுகளையும் சகிப் ஹல் ஹசன், பெட் கம்மின்ஸ் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிதிஷ் ரணா தெரிவுசெய்யப்பட்டார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal