திருமண நாளில் மணப்பெண் மாயமானதை தொடர்ந்து, ஏற்பாடு செய்யப்பட்ட திருமண மண்டபத்திலேயே மாயமான மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்தார் மாப்பிள்ளை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த சம்பவம் சில தினங்களின் முன்னர் நடந்தது.

பிரித்தானியாவில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதியை சேர்ந்த யுவதியொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனியார்துறையில் பணியாற்றும் யுவதியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்து, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த தொடர்பை நிறுத்தும்படி கூறியிருந்தனர். அதன்பின்னரே, பிரித்தானியா மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களின் முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டபமொன்றில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக மணமகன் முல்லைத்தீவு வந்திருந்தார்.

திருமணத்திற்கு முதல்நாள் மாலை, அயலிலுள்ள அழகுக்கலைஞரிடம் செல்வதாக கூறிவிட்டு சென்ற மணமகள் வீடு திரும்பவில்லை. மகளை காணவில்லையென குடும்பத்தினர் பரபரப்பாகி, பல இடங்களிலும் தேடினர். இரவு வேளையில், மணமகனின் பேஸ்புக் மெசஞ்சரில் யுவதி தகலொன்றை அனுப்பியுள்ளார்.

தான் ஒருவரை பல வருடங்களாக காதலித்திருப்பதாகவும், தனது சம்மதமின்றி பெற்றோர் திருமணத்தை நிச்சயித்திருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுவிட்டதாகவும் அதில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இரு வீட்டாரும் சந்தித்து பேசினர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளிவைக்க விரும்பவில்லை, இந்த வருடத்திற்குள் திருமணம் செய்யாவிட்டால் மணமகனிற்கு திருமணமாக பல வருடங்களாகும் என ஜோதிடர் எச்சரித்தது உள்ளிட்ட காரணங்களை காட்டி, திட்டமிட்டபடி மறுநாள் திருமணம் நடக்க வேண்டுமென்பதில் மணமகன் தரப்பினர் விடாப்பிடியாக இருந்தனர்.

இதற்காக, மாயமான மணமகளின் தங்கையை அவசரமாக பெண் கேட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன், மறுநாள் மாயமான மணமகளின் தங்கைக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal