தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்..!!!

ஜேர்மனி நாட்டில் வசித்து வரும் ஜெனிசியா தேவானந் என்ற 13 வயது சிறுமி தனது 13வது பிறந்தநாளை முன்னிட்டு வேப்பம்குளம் ஓமந்தையை சேர்ந்த சசிகரன் சரோஜா தேவி என்ற குடும்பத்திற்க்கான உதவித் திட்டத்திற்கு உதவி வழங்கி
உள்ளார்.

பெண்ணை தலமைத்துவமாக கொண்டவரும் நான்கு பிள்ளைகளுக்கு தாய் ஆகிய சசிகரன் சரோஜா தேவிக்கு
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் மன வளர்ச்சி குன்றிய நிலையில் மகளும் உள்ளார்கள்
சறோயாதேவி தினக்கூலி வேலைக்கு சென்று அதன் வருமானத்தில் பல சிரமத்தோடு வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வேலை பார்கும் இடத்தில் விபத்து ஒன்றில் காலில் காயம் பட்டு கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்

பல சிரமத்தின் மத்தியிலும் மன அழுத்தத்தோடும் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்த நிலையில்

இவர்கள் நிலை அறிந்து ஜெனிசியா தேவானந் SCSDO உடன் இணைந்து தனது பங்களிப்பாக 50000 ரூபா வழங்கி நிறுவனத்தின் உதவித் திட்டத்தோடு இணைந்து கொண்டார்.

அவரை வறுமையில் இருப்பவர்களுக்கு உதவும் மனப்பாண்மை கொண்ட நல் உள்ளத்தோடு வளர்த்த அவரின் பெற்றோரை வாழ்த்துவதோடு எமது நன்றியையும் நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜெனிசியா தேவானந் அவர்களோடு இணைந்து SCSDOவால் 130000 ஆயிரம் ரூபாவிற்கான உதவிகள் வழங்கப்பட்டது.

மிகவும் பற்றை நிறைந்த காணியினை சுத்திகரித்து அவர்கள் அன்றாட தேவைகளுக்கு கிணற்றில் நீர் எடுப்பதற்கான அனைத்து வேலைகளும் செய்து கொடுக்கப்பட்டதோடு
எதிர்காலத்தில் தமது காணிக்குள் தோட்டம் அல்லது பயிர்களை வளர்த்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மின்சார வசதிகள் செய்து தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

வீட்டிக்கு தேவையான எதிர்காலத்தில் பயன் பெறும் வகையில் சில மரங்களும் வழங்கி அவர்கள் சுயமாக வாழ்வாதாரத்தை மேன் படுத்த ஊக்குவிற்கப் பட்டது .

மேற்படி அவரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் அவர்கள் பட்டினி இல்லாது தினமும் அவர்களுக்கு உணவுகிடைக்க வேண்டும் என்ற வகையில்
6 மாதங்களுக்கு 5000 ரூபாவுற்கான உணவு பொருட்களை SCSDOவால் வழங்கப்பட உள்ளது.

By scs_admin

i am admin of scsdor

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal