போதைப்பொருள் பழக்கம் பொதுவாக இளைஞர்கள் மத்தியிலேயே காணப்படுவதால் , அவர்கள் அதிகமான நேரங்களை கழிக்கும் பாடசாலைகள் மேலதிக வகுப்புக்கள் , பல்கலைக்கழகங்கள் , மற்றும் கல்வி நிறுவனங்களில் இப்போதைப்போருளை கட்டுப்படுத்தும் , மற்றும் கண்காணிக்கும் ஓர் பொறிமுறையாக இப்பதிவு இடப்படுகிறது .

இவை வெறும் அனுமானங்கள் அல்ல நடந்த பல சம்பவங்களின் மூலம் தொகுக்கப்பட்டவை எனவே தாம் சார்ந்த நிறுவனங்களில் அதிபர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இவற்றை கடைப்பிடிக்க முயற்சியுங்கள் . இது நமது சமூகத்தின் எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

♦️ மாணவர்களின் கண்கள் சிவப்பாக அல்லது அரைவாசி மூடிய நிலையில் இருக்கின்றதா என அவதானியுங்கள்

️காரணமின்றி புன்னகைக்கும் தேவையில்லாமல் பேசும் , அதிகமாக தூங்கும் , மற்றும் நடுக்கம் , அதிக வியர்வை ஏற்படும் மாணவர்களை சந்தேகியுங்கள்.

♦️ வகுப்பறையின் குப்பைக்கூடையை எதேச்சையாக ( random பரிசோதியுங்கள் அதனுள் பேனா குளிசை கவர்கள் பற்ற வைத்த தாள் சுருட்டிய பேப்பர்கள் கச்சான் தகடுகள் , கண்ணாடி குழாய்கள் தலை கழற்றப்பட்ட lighter போன்றன காணப்பட்டால் உஷாராகுங்கள்.

♦️ Interval நேரம் , பாடசாலையின் எல்லைகளை ( கதவுகள் , சுவர்கள் மேலால் அவதானியுங்கள் . அதனூடாக இவ்வியாபாரம் அதிகமாக இடம்பெறுகிறது இந்நேரம் வெளி யாரும் உள்ளே உலாவுகிறார்களா என அவதானியுங்கள்.
ஏனெனில் , interval நேரம் யாரும் அறியாமல் போதை பாவிப்பது மாணவர்களுக்கும் இலகு .

♦️கென்டீன் சிற்றூழியர்களும் அடிக்கடி அவதானியுங்கள் , காரணம் இதுவே மிக இலகுவாக விற்கக்கூடிய இடம் .

♦️மிக நேரத்தோடு வரும் மாணவர்களையும் , மிகப்பிந்தி செல்லும் மாணவர்களையும் , அவர்களின் செயற்பாடுகளையும் அவதானியுங்கள்.

♦️ அனுமதி இல்லாத , interval நேர ஐஸ்பழம் , கடலை , இனிப்புப்பண்டம் போன்ற வியாபாரங்களை தடை செய்யுங்கள் . டொபி , இனிப்பு வகைகள் போன்றவை புது வகையான brand எனின் , அல்லது brand பெயர்கள் இல்லை எனின் , அவதானியுங்கள் .

♦️மாணவர்களின் பெருவிரல் , சுட்டுவிரலை அவதானியுங்கள் . வித்தியாசமான மணம் , நிறம் உள்ளதா என பாருங்கள் . பற்கள் ஒரு வகையான பழுப்பு நிறத்தில் ( meth mouth ) உள்ளதா எனவும் உதடுகளின் உட்பகுதி சிதைவடைந்துள்ளதா மேலும் சில வேளை வாயிலிருந்து உமிழ்நீர் வழிகின்றதா எனவும் பாருங்கள் .

♦️பாடசாலை தொடங்கும் நேரமும் , விடும் நேரமும் வெளியில் வித்தியாசமானவர்கள் யாரும் நடமாடுகின்றனரா என அவதானியுங்கள் .

♦️ மாணவர்களின் புத்தகம் , கொப்பி , கொம்பாஸ் , பேர்ஸ் ஆகியவற்றை random ஆக திறந்து பாருங்கள் ஏதும் வெள்ளை நிற பவுடர்கள் பக்கங்களுக்கிடையில் உள்ளனவா என்று . இவ்வாறான போதைப்பொருளே இப்போது அதிகமும் பாவிக்க இலகுவும் ஆகும்,

சில staff , மற்றும் சிற்றூழியர்கள் மீதும் அவதானமாக இருங்கள் . ” இவர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் செய்ய மாட்டார் ” , ” இது பெண் பிள்ளை செய்யாது ” என அலட்சியமாயிராதீர்கள்

♦️தேவைக்கு மேலதிகமாக பணம் வைத்திருக்கும் மாணவர்கள் மீது பார்வையை செலுத்துங்கள் . அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளுங்கள் .

♦️ அடிக்கடி நீர் அருந்தும் , தாகம் ஏற்படும் மாணவர்களை அவதானியுங்கள்.

♦️ கல்வியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்ட மாணவர்களை சந்தேகியுங்கள்

♦️சொல்லாமல் இருக்க முடியாது பாடசாலைக்கு அடிக்கடி வந்து போகும் பெற்றோர்களின் மீதும் விழிப்பாயிருங்கள்

♦️போதைப்பொருளின் தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள் பிடிபட்டால் தமது வாழ்க்கைக்கு ஏற்படும் நிரந்தர பாதிப்புகளை பற்றியும் எடுத்துரையுங்கள் , மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல்களை ஊக்குவியுங்கள்

♦️தனிமையிலேயே திரியும் மாணவர்களையும் , அடிக்கடி மலசல கூடம் செல்லும் மாணவர்களையும் அவதானியுங்கள் .

♦️ சந்தேகத்துக்கிடமான போதை பொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்பட்டால் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நாடி அது போதைவஸ்து என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்பே தகவலை வெளியிடுங்கள் .

♦️இவ்வளவு காலமாக # மாணவர்கள் # சப்பாத்து # அணிந்தார்களா , # முடி # வெட்டினார்களா , # நகம் # வெட்டினார்களா என பார்த்ததெல்லாம் சற்று ஒதுக்கிவிட்டு இந்த பயங்கர சீரழிவை இல்லாதொழிக்க மேற்கூறியவற்றின் மீது அவதானம் செலுத்துங்கள் .

♦️இதன் அர்த்தம் சகலரின் மீதும் சந்தேகியுங்கள் என்பதல்ல . நியாயமான சந்தேகம் தவறல்ல . இக்கொடிய தீங்கிலிருந்து சமூகத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வாருங்கள் .

எதிர்காலம் ஆபத்தானது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal