கல்கிசை, காலி வீதியில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக கல்கிசை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, இடல்கசின்ன, பன்னிபிட்டிய, வாதுவ, வத்தளை மற்றும் ஹல்மில்லாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என 19 மற்றும் 29 வயதுடைய பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal