வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் (shafi shihabdeen)சம்பள நிலுவையை செலுத்தி மீண்டும் அவரை பணியில் இணைத்துக்கொள்ளும் தீர்மானத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera) தெரிவித்துள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் சிங்கள பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவருக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கி சேவையில் இணைத்துக்கொண்டால், வழக்கு விசாரணைகள் பலவீனமடையும் எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மருத்துவர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.