தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் குடலிறக்கத்திற்காக அறுவை சிகைச்சையினை தனியார் வைத்தியசாலையில் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்பொழுது அந்த அறுவைசிகிச்சை தொடர்பில் மீண்டும் அவர் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடு சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
