மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக ஏற்கமறுக்கும் சமுதாயம்,
?விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,
?எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,
?திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,
?மணமேடைக்கு வரும் மணமகன் விவசாயி என்றேன் வேண்டாம் என்றார்கள்,
?எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,
இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்…???
விளைவித்தவன்
பிச்சைக்காரன்…!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்…!!
இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்…!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்…!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்…!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்…!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை….!!
?விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்
படித்து வருந்தியது!!!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal