
எலிகள் வாழ்வதும்,
பூனைகள் வாழ்வதும்
ஒரே வீட்டில் தான்……….
புலிகள் வாழ்வதும்
புள்ளிமான்கள் வாழ்வதும்
ஒரே காட்டில் தான்………..
சிறுமீன்கள் வாழ்வதும்,
சுறாமீன்கள் வாழ்வதும்
ஒரே கடலில் தான்…………
இல்லாதவனுக்கும்,
இருப்பவனுக்கும்
பூமி ஒன்றுதான்………….
வாழ்க்கை என்பது ஏழை,
எளியவர்களுக்கு போராடி
வெற்றி கொள்வது……………
ஏமாற்று
அரசியல்வாதிகளுக்கோ
அடித்து பிடுங்கி
சாப்பிடுவது…………….
கொள்கை என்பார்கள்,
கூட்டணி என்பார்கள்,
அடித்த கொள்ளையில்
ஆளுக்கு பாதி பிரித்து
கொள்வார்கள்…………..
பங்கு பிரிப்பதில்
பங்கம் வந்து விட்டால்
அடுத்த அணிக்கு மாறி
அன்னாஹசாரே,
அய்யாக்கண்ணு
போன்றவர்களை தூண்டி
விடுவார்கள்…………….
ஆட்சி மாறுவதால்
கட்சி மாறுமேவொழிய
காட்சி மாறாது, மக்கள்
கண்ணீர் விடுவது ஓயாது……
ஏழைகள் முன்னேற
ஒரே வழி கல்வி
கற்பதுதான்……….
அதிலும் கூட
நுழைவுத்தேர்வு என்ற
பெயரில் உங்களை
நுழைய விடாமல்
தடுப்பது எது என
சிந்திப்பீர்,செயல்படுவீர்.
எழுதியவர் – கார்த்திகேயன்