வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது.

வாட்ஸ் அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது.

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்காக வாட்ஸ் அப்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறது. அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

⭕01 அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி.

வாட்ஸ் அப் நிறுவனம் ட்விட்டர் போன்று ஒரு புதிய செய்தியை அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ் அப் பயனர்கள் தாங்கள் அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள் திருத்தி அமைக்கும் வசதியை வழங்க இருக்கிறது.

⭕02 வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வசதி.

வாட்ஸ் அப் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் வரம்பை அதிகரிக்க இருக்கிறது. தற்போது ஒரு வாட்ஸ் அப் குழுவின் உறுப்பினர்களின் அதிகபட்ச வரம்பு 512 ஆகும். மெட்டா இதனை இரண்டு மடங்காக உயர்த்தவிருக்கிறது. இதன் மூலம் ஒரு வாட்ஸ் அப் குழுவில் 1,024 உறுப்பினர்களை சேர்க்க முடியும்.

⭕03 ஒரு ஆவணத்தை தலைப்புடன் அனுப்பும் வசதி.

வாட்ஸ் அப், தன் பயனாளர்களுக்கு புகைப்படம், ஆவணம், கிப் (gif) ஆகியவற்றை தலைப்புடன் சேர்த்து அனுப்பும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது வாட்ஸ் அப் குழுவில் அல்லது சேட்- ல் (chat) பயனர்கள் தங்களுக்குத் தேவையான ஆவணத்தை எளிதில் தேட உதவுகிறது.

⭕04 அனுப்பப்பட்ட செய்தியை ஒரு முறை மட்டுமே பார்க்கும் வசதி.

வாட்ஸ் அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு தகவலை ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம் வீடியோ அல்லது புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தவிர்ப்பதற்காக இவ்வசதியை ஏற்படுத்த உள்ளது.

⭕05 வாட்ஸ் அப்பில் பிரீமியம் சந்தா வசதி.

வாட்ஸ் அப் வணிகம் மற்றும் தொழில்களுக்காக பிரீமியம் சந்தா திட்டத்தை (premium subscription) உருவாக்க உள்ளது. இதன் மூலம் வணிகம் மற்றும் தொழிலின் மேம்பட்ட சேவைக்காக கட்டணம் செலுத்தவும் பெறவும் முடியும். இந்த பிரீமியம் வசதி தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக கணக்குகளுக்கான (business account) விருப்பத்திட்டமாகும்.

இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் (iOs) க்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனாளர்களுக்கு தற்போது கிடைக்கிறது.

⭕06 டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ்-ல் ஸ்டேட்டஸ்களைக்கு பதில் அளிக்கும் வசதி.!

மொபைல் போனில் ஸ்டேட்டஸ்களுக்கு பதில் அளிப்பதைப் போன்று டெஸ்க்டாப்பிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக தனியே ஒரு சைட் – பாரையும் (side bar) ஏற்படுத்தவிருக்கிறது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal