2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எதிர்வரும் நான்காம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்துவதற்கான விண்ணப்பங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2785231, 011 2785216, என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாகவும், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியும் அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x