
2022ஆம் ஆண்டு பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ளபடி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் சிறப்பு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் மூலம் இறக்குமதி வாகனங்களின் விலை மேலும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஆரோஷ ரொட்ரிக்கோ இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயத்தை ஒதுக்கத்தை சேமிக்கும் வகையில் கோவிட் காலத்தில் அரசாங்கம், வாகன இறக்குதிகளை இடைநிறுத்தி வைத்துள்ளது.
இந்தநிலையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாட்டில் வாகன இறக்குமதிகள் தொடர்பில் பேசுவதில் பயன் இல்லை என்று நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அரோஷ ரொட்ரிக்கோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வாகனங்கள் விலை தற்போது அதிகரித்துள்ள நிலையில், மேலும் அவற்றுக்கு வரிகளை விதிக்கவேண்டாம் என்று அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்