பழனியப்பன் சிவராமலிங்கம்

நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த சடங்கு முறைகளில் வளைகாப்பும் ஒன்று.
# வளைகாப்பு ஏன் நடத்துகிறார்கள்?
இந்தக் கேள்விக்கு அநேகம் பேருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பலரும் வளைகாப்பை ஒரு சடங்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கின்றனர்.
பலரும் வளைகாப்பு சம்பந்தமாக வித விதமான நடைமுறைகளைச் சொன்னாலும் அவை எதுவும் அறிவியல் ரீதியாக ஒத்துப் போகவில்லை.
ஆனால் தற்போது உள்ள நாகரிக வளர்ச்சியில், நம் முன்னோர்கள் கண்டுப்பிடித்த சடங்கு முறைகளின் பலன்களும் மகத்துவமும் தெரியாமலேயே நாம் அவற்றைக் கை விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
நம் முன்னோர்கள் கண்டுப்பிடித்த அனைத்து நடைமுறைகளிலும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு அறிவியல் பலன் இருக்கும்.
அந்த வகையில் வளைகாப்பு சடங்கு முறையில் மிகப் பெரிய அறிவியல் பயன் மறைந்திருக்கிறது.
ஒரு பெண் கர்ப்பம் தரித்த 8 அல்லது 9 வது மாதங்களில் வளைகாப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு ஒரு பெண் கர்ப்பம் தரித்த 8 அல்லது 9 வது மாதங்களில் வயிற்றில் இருக்கும் சிசுவானது முழு வளர்ச்சியை எட்டியிருக்கும்.
தற்போது உள்ள காலத்தில் இஸ்ரேல் போன்ற நாடுகளில் வயிற்றிலிருக்கும் குழந்தையின் அறிவுத்திறன் வளர்ச்சிக்காக ஒரு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதாவது கர்ப்பம் தரித்த 8 அல்லது 9 மாதமான பெண்களின் வயிற்றுப் பகுதியில் டால்பின் கொண்டு ஒலி எழுப்புகிறார்கள்.
இதற்கு அவர்கள் கூறும் காரணமானது கர்ப்பத்தில் முழு வளர்ச்சியை எட்டியிருக்கும் குழந்தைக்கு, டால்பின் எழுப்பும் ஒலியானது மூளை நரம்புகளை தூண்டும் திறன் படைத்தது.
டால்பின் எழுப்பும் அந்த ஒலியின் அலை வரிசையானது குழந்தையின் மூளை நரம்பைத் தூண்டும் என்பதை அறிவியல் ரீதியாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வகை சிகிச்சை முறையை டால்பின் பிசியோதெரபி என்று அழைக்கிறார்கள். இந்த நடைமுறைக்கு சில நிமிடங்களுக்கு பல லட்சம் வரை பெறப்படுகிறது.
இதற்கும் நம் வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.
மீனவர்கள் மற்றும் டால்பின் ஒலியைக் கேட்டவர்கள் இதை அறிந்திருக்க வாய்ப்புண்டு.
டால்பின் எழுப்பும் ஒலியும் நம் கண்ணாடி வளையல் எழுப்பும் ஒலியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.
அதாவது இவை இரண்டும் ஒரே அளவு அதிர்வை ஏற்படுத்தக் கூடியவை.
எனவே நாம் வளைகாப்பு நடத்தும் காலங்களில் அணியப்படும்
கண்ணாடி வளையல்கள் ஏற்படுத்தும் ஒலியானது வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது.
இதனால் பிறக்கும் குழந்தையின் அறிவுத்திறன் வளர்கிறது.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எந்தவொரு அறிவியல் உபகரணங்களும் இல்லாமல் பல நாறு ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய உண்மையை எவ்வாறு நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.
பல்வேறு ஆராய்ச்சி, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் கண்டறியும் விஷயங்களை நம் முன்னோர்கள் எந்த உபகரணமும் இல்லாமல் கண்டறிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் வகையில் சடங்குகள் என்ற பெயரில் ஒளித்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் அவற்றையெல்லாம் நாகரீக வளர்ச்சி என்றப் பெயரில் புறம் தள்ளி வருகிறோம்..
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல
பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிற(வி)ப்பு..
பெண்மையைப் போற்றுவோம்..