திருட வந்த இடத்தில் மனம் திருந்தி மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன்...! |  Thief writes apology letter in Kerala., | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online ...

வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று இரவு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவில் பாதுகாப்பாக பூட்டப்பட்ட வேளை, மணிகோபுரம் ஊடாக ஏறி கோவிலுக்குள் இறங்கிய திருடன், கோவில் மண்டபத்தில் மூலவருக்கு நேராக வைக்கப்பட்ட உண்டியலை எடுத்துக்கொண்டு சென்று, வைரவர் சன்னிதிக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்த இரும்பு கம்பியால் உடைத்து, உண்டியலில் உள்ள பணங்களை திருடிக்கொண்டு சென்றுள்ளான்.

திருடனின் வருகை கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமெராவில், பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோவில் நிர்வாகத்தினர் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தான்தோன்றீஸ்வரர் கோவிலின் இராஜகோபுர கட்டுமான பணிகள் நடைபெற்று வரும்வேளை இந்த கொள்ளைச் சம்பவம் பதிவாகி உள்ளது.

  அதேவேளை டன், கடந்த ஒரு மாத காலமாக உண்டியலில் உள்ள பக்தர்களின் காணிக்கைகள் எடுத்துக் கொள்ளளப்படவில்லை என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal