எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களை தொடர்ந்து கஜகஸ்தான் அரசாங்கம் ராஜினாமா செய்துள்ளது.

அரசாங்கத்தின் ராஜினாமாவை ஜனாதிபதி Kassym-Jomart ஏற்றுக்கொண்டதாக புதன்கிழமை  ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து Almaty நகரில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

இதனைத்தொடர்ந்து, எரிபொருளின் விலை உயர்வை திரும்ப பெறுவதாக செவ்வாய்க்கிழமை அரசு அறிவித்தது.

செவ்வாய்க்கிழமை Almaty நகரில் முக்கியமான சதுக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான போராட்டகாரர்களை கலைக்க, பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகள் பயன்படுத்தினர்.

இந்நிலையில், புதன்கிழமை Almaty மற்றும் Mangistau மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக ஜனாதிபதி Kassym-Jomart அறிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்தார்.

கஜகஸ்தான் அரசாங்கத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, துணை பிரதமர் Alikhan Smailov-வை, நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக நியமித்துள்ளார்.

நாட்டில் நடந்த இந்த வன்முறைக்கு பின்னணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூண்டுதல்கள் இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

புதனன்று செயல் அமைச்சரவை உறுப்பினர்களிடம் பேசிய Tokayev, LPG விலைகளை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டார்.

மேலும் தனிப்பட்ட திவால் சட்டத்தை உருவாக்கவும், ஏழைக் குடும்பங்களுக்கு வாடகைக்கு மானியம் வழங்கவும் அவர் இடைக்கால அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்.

அவசர நிலை பிரகடனத்தை தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மேம்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal