எதிர்வரும் 4ம் திகதி  இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 இந்த நாளில், வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்று யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களைப்  பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 4ம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x