உலக நாடுகளை அணு ஆயுதச் சோதனைகளின் மூலம்அச்சுறுத்தி வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மகள் முதல்முதலில் பொது வெளியில் பார்வைக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதன்படி ஒரு மகன் 2010 இல் பிறந்தார், ஒரு மகள் 2013 இல் பிறந்தார், பின்னர் ம் 2017 இல் பிறந்ததாகவும் கூறப்படுகின்றது.

எனினும் நீண்ட நாட்களாக அவர்கள் பொதுவெளியில் காண்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கிம் ஜாங் உன் மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வடகொரியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது மேடை ஒன்றில் கிம் ஜூ பே என்ற சிறுமி அங்கிருந்த சிறுமிகளுடன் நடனமாடினார்.

அவர்தான் கிம் ஜாங் உன்-இன் மகள் என்று செய்திகள் வெளியாகின. காரணம் அந்த நிகழ்வில் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்ட நிலையில், கிம் ஜாங் உன்-இன் மனைவி ரி சோல் ஜூ மேடையிலிருந்த பல சிறுமிகளில் அந்த சிறுமியை அரவணைத்ததால் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் 9 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட வட கொரியா நிறுவப்பட்ட ஆண்டு விழாவிற்கு இளம் வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிபர் கிம் இன் மகள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அந்த நிகழ்வை அடுத்து கிம் ஜாங் உன்னின் மகள் வட கொரிய தொலைக்காட்சியில் காணப்பட்ட காட்சிகள் அங்கு வைரலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal