
லெஜண்ட் சரவணன் அருள் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா தான் இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது
மேலும் இந்த படம் ஒரு அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஊர்வசி ரௌட்டாலா இந்த படத்தில் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும் ரூபன் எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.