ருமேனியாவில் பல முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த திறமைவாய்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்டியா தெரிவித்தார்.

.
அலரி மாளிகையில் கடந்த 7ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே தூதுவர் சியுஜ்தேயா இதனைத் தெரிவித்துள்ளார்.பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ருமேனியா தூதுவர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஒரு பரிமாற்ற விஜயத்தின் கீழ், உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, இலங்கை கல்வியாளர்கள் குழு விரைவில் ருமேனியாவுக்குச் செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் ருமேனியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த பிரதமர், இலங்கைக்கு வழங்கப்பட்ட ருமேனிய தொடரூந்து பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் குறித்து விசேடமாக குறிப்பிட்டார்.

இலங்கையுடன் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக தமது நாடு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும் இதன் மூலம் வர்த்தகச் செயற்பாடுகள் சுமூகமாக அமையும் எனவும் தூதுவர் சியுஜ்டியா தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x