இன்று காலை 8.00 மணிமுதல் ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 34 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது இன்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை திடீர் ரயில்வே வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தடுக்க இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ்களை சேவைக்காக நிறுத்தியுள்ளது. இந்நிலையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தடையில்லா போக்குவரத்தை வழங்க தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க கூறியுள்ளார்.
அத்துடன் , இது குறித்து டிப்போ மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கடமைகளுக்காக பயணிக்கும் அனைத்து ஊழியர்களும் டிப்போ மேலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .