எழுதியவர் – மா மணிவண்ணன்

என்னையும் அவளையும்
பற்றிய கவிதைகளில்.
தொடர்வதற்கு ஒரு கோடு
வினவுவதற்கு கேள்வி
தொடர் மற்றும் முற்று புள்ளியென
இடுவதற்கு
அவளாலும் என்னாலும்
மட்டும் தான் முடியும்
எழுதும் இந்த கவிதைகளில்
செதுக்கும் இந்த வரிகள்
சிலைகள் இல்லை
என்பதும் தெரியும்
அவளும் நானும் சிற்பியல்ல
என்பதும் தெரியும்
இருந்துவிட்டு போகட்டும்
அப்படி அழகாய்
செதுக்கித்தான் என்ன நடந்துவிட போகின்றது
உலக அதிசயத்தில்
நீ பத்தாவது என்ற பொய்யை
அவள் ரசிக்கதானே போகின்றாள்