
யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 22 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியினை முடக்குவதற்கு யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே அரசடிப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி தேர் உற்சவம் இடம்பெற்ற பின்னர் அப் பகுதியில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.