இன்று யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில், இன்றையதினம் மாதகல் கடற்பகுதியில் மீட்கப்பட்ட குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து, கடற்றொழிலுக்கு சென்ற, நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவர், நேற்று முன்தினம் காணாமல்போயிருந்தார்.

இதையடுத்து, காணமல்போன நபரைத் தேடும் பணிகளில் பிரதேசவாசிகள் ஈடுபட்டனர். இந்நிலையிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

சம்பவம் குறித்து இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x