எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களின் பயணங்களை இலவாக்குவதற்கு விசேட தொடருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். இந்த விசேட தொடருந்து சேவை 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து- கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.50 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். மேற்படி விசேட தொடருந்து சேவை 12, 15, 17, 19, 21 ஆகிய தினங்களில் இயங்கும்.

யாழ்ப்பாணம் – குருணாகல் விசேட தொடருந்து சேவை இரவு 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாவதுடன், இந்த விசேட தொடருந்து சேவை 12 ஆம் திகதி மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal