யாழில்  21 வயது காதலனுடன் மாயமான குடும்பப் பெண்! தேடும் கணவர்

யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தன்னைவிட 13 வயது குறைந்த காதலனுடன் தலைமறைவான நிலையில் பெண்ணின் கணவர் , மனைவியை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகின்றது.

34 வயதான குறித்த குடும்பப் பெண்ணும், கட்டுவனை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருமே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பெண் திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையென தெரிய வருகிறது.

இந்நிலையில் யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த குறித்த இளைஞனும், அங்கு வாடிக்கையாளராக சென்று வந்த குடும்பப் பெண்ணும், காதலர்களாகியுள்ளனர்.

இந்த விவகாரம் பெண்ணின் கணவரிற்கு தெரிய வர கடந்த வாரம் அவர்களிற்குள் சச்சரவு தோன்றியதாக கூறப்படும் நிலையில், கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு, தாயாரின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் பெண் வீட்டைவிட்டு புறப்பட்டுள்ளார்.

அதேவேளை கணவன் – மனைவிக்குள் முரண்பாடு தோன்றினால், தாயார் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் மனைவி, சற்று தாமதமாக வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்ததால், கணவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எனினும், இரவு மனைவி வீடு திரும்பவில்லை. என்பதனால் மறுநாள் காலையில் மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்ற போது, அவர் அங்கு செல்லவில்லையென்பது தெரிய வந்தது.

அதன் பின்னர், பெண்ணின் தாயார் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர், தான் புதிய வாழ்க்கையை தேடி சென்றுவிட்டதாகவும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாமென தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது.

இதனால் அரண்டு போன கணவன், தனது மனைவியின் காதலன் யார் என விசாரித்து இளைஞனின், வீட்டிற்கு சென்ற போதும், சம்பவ தினத்தின் பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal