
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞர் ஒருவருக்கு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையாக வாளினால் வெட்டியுள்ளனர்.
கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வாள்வெட்டுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அரியாலையில் சந்திரன் என்ற உள்ளூர் “சண்டியன்“ இருக்கிறார். அவருடன் இந்த இளைஞன் நட்பாக இருந்துள்ளார்.
“சந்திரனுடன் இனி நாம் காணக்கூடாது. சந்திரனுடன் திரிந்தால் வெட்டி விடுவோம்“ என எச்சரித்தே, இன்று வாளால் வெட்டியுள்ளனர்.. இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாள்வெட்டில் ஈடுபட்ட 4 ரௌடிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலையில் சந்திரன் என்ற உள்ளூர் “சண்டியன்“ இருக்கிறார்.
அவருடன் இந்த இளைஞன் நட்பாக இருந்துள்ளார். “சந்திரனுடன் இனி நாம் காணக்கூடாது. சந்திரனுடன் திரிந்தால் வெட்டி விடுவோம்“ என எச்சரித்தே, இன்று வாளால் வெட்டியுள்ளனர்.. இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாள்வெட்டில் ஈடுபட்ட 4 ரௌடிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.