யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதனால் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இதன்போது நல்லையா கணேஸ்வரன் என்னும் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த 62 வயதான 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றும் இந்த முதியவர் கடந்த 29ஆம் திகதி ஆலயத்திற்கு சொந்தமான மாடு ஒன்றை கட்ட முற்பட்டபோது மாடு முட்டி வயிற்றில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.

யாழில் துயரம் - கோவில் மாடு முட்டி குடும்பஸ்தர் பரிதாப மரணம்

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் 5 நாள் சிகிச்சை பலனளிக்காது இன்று உயிரிழந்தார். உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal