
யாழ். நாவலர் வீதியில் இரு சகோதரர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று (புதன்கிழமை) காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.